Monday, November 9, 2009

7. இட்லரின் கனவு தகர்க்கப்பட்டது!

காத்யன் ஒரு எல்லையோர நகரம். பாவெல் தனது குழந்தைகளுடன் காலை உணவருந்திக் கொண்டிருந்தான். வானத்தில் பேரிரைச்சல். எந்திரங்களின் ரீங்காரம் இதயத்தை அதிர வைத்தது. பாவெல் வெளியே ஓடி வந்து பார்த்தான். ஆயிரக்கணக்கான ஜெரிமன் போர் விமானங்கள் வானத்தை ஆக்கிரமித்திருந்தன. ஒரே நேரத்தில் பல ஆயிரம் குன்டுகள் நகரத்தில் விழுந்தன. ஒவ்வொரு குண்டும் எரிமலையாக வெடித்தது. நகரம் சிதைந்தது. பின் எரிந்தது.

பாவெல் சுதாரித்துக் கொள்வதற்குள் அவனது வீடு தரைமட்டமாகியது. அவன் கண்ணெதிரிலேயே அவனுடைய குழந்தைகள் இறந்தனர். துயரப்படக் கூட அவனுக்கு நேரமில்லை. ஒரு சூடான பொருள் அவன் பின் ,மண்டையைத் தாக்கியது. பாவெல் மயங்கி விழுந்தான். காத்யன் நகரம் சுடுகாடாக மாறியது. ஒரு சிலரே தப்பிப் பிழைத்தனர்.

சோவியத் ரஷ்யாவின் ஆயிரக்கணக்கான ஊர்கள் இதே முறையில் அழிக்கப்பட்டன. என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் முன்னரே அத்தனையும் அழிந்தது. இட்லரின் படைகள் சோவியத்தின் மீது படையெடுத்து இருக்கின்றன என்பதை அதன் பின் தான் சோவியத் மக்களும், உலக மக்களும் தெரிந்து கொண்டனர்.

இந்த திடீர் தாக்குதலை எல்லைப்புறத்தைக் காத்து நின்ற சோவியத் படைகள் தீரத்துடன் எதிர்த்து போரிட்டன. இருந்தும் எதிரியின் ஆயுதபலத்தின் முன்னால் அவற்றால் அதிக நேரம் தாக்கு பிடிக்க இயலவில்லை. செம்படை மெதுவாக பின்வாங்கியது. சோசலிசத் தாய்நாட்டைப் பாதுகாக்க பாவெல் செம்படையில் சேர்ந்தான். பல லட்சம் உழைக்கும் மக்கள் செம்படையில் இணைந்தனர். இருந்தும் செம்படைவை சரி செய்ய முடியவில்லை.

ஜெர்மனி மட்டும் தன் ஆயுத பலத்தை அதிகரித்தது? சோவியத்தால் ஏன் அதை செய்ய முடியவில்லை? எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விகள் இவை. ஆனால் பதில் மிக எளிமையானது. ஜெர்மனி ஒரு முதலாளித்துவ பாசிச நாடு. பாசிஸ்டுகள் நாட்டின் வளங்களைக் கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சிப்பதில்லை. மாறாக ஆயுதங்களை உருவாக்கினர். கொடிய வறுமையில் மக்களைத் தள்ளினர்.

இட்லர் ஆயுதங்களை உருவாக்கிக் கொண்டு இருந்த அதே நேரத்தில் ஸ்டாலினோ சோவியத் ரஷ்யாவின் வளங்களைக் கொண்டு ஆலைகள் அமைத்தார். வேலையினமையை ஒழித்தார். மருத்துவ வசதிகளைப் பெருக்கினார். போக்குவரத்து வசதிகளை உருவாக்கினார். பள்ளிகூடங்களை கட்டினார். கல்லாமையை ஒழித்தார். ஆற்றல் நிறைந்த புதிய மனிதர்களை உருவாக்கினார். புதிய சமூகத்தைப் படைத்தார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பிறகு, எஞ்சியிருந்த வளங்களைக் கொண்டு குறைந்த அளவே ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் தான் இட்லர் தொடக்கத்தில் ஆயுத மேலாண்மை பெற்றிடுந்தான். எனினும், பாசிசத்தின் பிரமாண்ட ஆயுத பலத்தை நிர்மூலமாக்க எளியு ஆயுதங்களுடன் செம்படை வீரர்கள் வீரச்சமர் புரிந்தனர். பாசிஸ்டுகள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்தனர். மற்ற நாடுகளை வீழ்த்தியதைப் போல் எளிதாக சோவியத்தை வீழ்த்த முடியவில்லை.

இரண்டு வாரங்களில் சோவியத்தை மண்டியிட வைப்பதாக ஊளையிட்டான் இட்லர். வாரங்கள் மாதங்களாயின. இட்லரின் கனவு பலிக்கவில்லை. ஒப்பில்லாத தியாகங்கள் மூலம் தங்கள் தாய் நாட்டைப் பாதுகாத்தனர். சோவியத் ரஷ்யாவின் உழைக்கும் மக்கள்.

No comments:

Post a Comment